சுதா கொங்கரா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லன், ஜோடி யார் தெரியுமா?

Published : Aug 27, 2024, 07:44 AM ISTUpdated : Aug 27, 2024, 08:16 AM IST

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க உள்ள புறநானூறு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளது யார் என்பதை பார்க்கலாம்.

PREV
14
சுதா கொங்கரா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லன், ஜோடி யார் தெரியுமா?
Amaran

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் உருவாகி உள்ளது. அப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். அதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.

24
SK 23

இதுதவிர ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் எஸ்.கே.23 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் என்கிற கன்னட நடிகை நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் சிவா. இது அவரின் 24-வது படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்.. கூலி படத்தில் ஒரு மரண மாஸ் கேமியோ - எந்த நடிகர் தெரியுமா?

34
Sudha Kongara, lokesh kanagaraj

சிவகார்த்திகேயன் கைவசம் உள்ள மேலும் ஒரு திரைப்படம் புறநானூறு. இப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். இது சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாக உள்ளது. இப்படத்தில் முதன்முதலில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். அவருடன் துல்கர் சல்மான், அதிதி ஷங்கர், நஸ்ரியா ஆகியோர் நடிக்க கமிட்டாகி இருந்த நிலையில், அப்படத்தை பாதியிலேயே கைவிட்டனர். அதன்பின்னர் சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயனை வைத்து அப்படத்தை இயக்க உள்ளார் சுதா கொங்கரா.

44
sreeleela

புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க லோகேஷ் கனகராஜ் கமிட்டாகி உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது அப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு திரையுலகில் டிரெண்டிங் நாயகியாக வலம் வரும் ஸ்ரீலீலா தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இப்படம் மூலம் அவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மூணு சிசேரியன் தாங்கியிருக்காங்க.. என் வலியெல்லாம் ஒன்னுமே இல்ல - மனைவி பற்றி எமோஷனலாக பேசிய SK!

Read more Photos on
click me!

Recommended Stories