இப்போது 39 வயது நிரம்பிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆர்த்தி என்பவரோடு திருமணம் நடந்து முடிந்தது. அவருக்கு ஆராதனா, குகன் மற்றும் பவன் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அண்மையில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் தனது மனைவி குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். "எனக்கு இப்பொழுதும் திரைத்துறையில் பல மன உளைச்சல்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது, உண்மையில் நான் எதிர்கொள்ளும் மன உளைச்சல்களால், எப்போதோ சினிமாவிலிருந்து விலகி விட வேண்டும் என்று நினைத்தேன்".