ரஜினிகாந்த், கமல், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் சாயலில் உள்ள சீரியல் ஹீரோஸ்!

First Published | Aug 26, 2024, 10:53 PM IST

வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும், கமல், ரஜினி, விஜய், அஜித், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களின் சாயலில் இருக்கும் சில சின்னத்திரை சீரியல் பிரபலங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
 

Sabari

சபரி:

விஜய் டிவியில் வேலைக்காரன் என்கிற சீரியலில் நடித்து பிரபலமான சபரி தற்போது, 'பொன்னி' சீரியலில் நடித்து வருகிறார். கிராமத்து கதாபாத்திரம் மற்றும் சிட்டி பையன் என எப்படி பட்ட வேடத்திலும் பின்னி பெடல் எடுக்கும் சபரி, பார்ப்பதற்கு ஒரு சாயலில் நடிகர் சூர்யா போலவே இருப்பார்.

Ashish

ஆஷிஷ்:

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் இரண்டு பொண்டாட்டி கதையான 'முத்தழகு' சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் ஆஷிஷ். இவர் ஒரு சாயலில் பார்க்க, இளம் வயதில் அஜித் எப்படி இருந்தாரோ அப்படி தான் இருப்பதாக ரசிகர்கள் கூறுவது உண்டு.

மனோரமாவுடன் மோதல்; தடை போட்ட ரஜினிகாந்த்! காரணம் யார்? ரமேஷ் கண்ணா உடைத்த ரகசியம்!

Tap to resize

Siddharth

சித்த்தார்:

விஜய் டிவி தேன்மொழு பி.ஏ, ஈரமான ரோஜா 2, சரவணன் மீனாட்சி 2, போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். தற்போது பனிவிழும் மலர்வனம் என்கிற செயலில் நடித்து வருகிறார். இவர் விக்ரம் போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறுவது உண்டு.

Naveen

நவீன்:

ஜீ தமிழில் இருந்து விஜய் டிவிக்கு தாவியவர் தான் நவீன். தற்போது சின்னமருமகள் சீரியல் நடித்து வருகிறார். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் ஹீரோ நவீன் இளம் வயது தலைவர் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறுவது உண்டு.

புறக்கணிக்கப்படுகிறார்களா தமிழ் நடிகைகள்? கோலிவுட்டில் அதிகம் கவனம் ஈர்த்த 5 மலையாள நடிகைகள்!

Amit Bhargav

அமித் பார்கவ்:

கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து தமிழில் பிரபலமானவர் அமித் பார்கவ். தற்போது வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் பார்ப்பதற்கு ஒரு சாயலில் சிபி ராஜ் போலவே இருப்பார்.

Sathish

சதிஷ்:

பாக்கியலட்சுமி சீரியலில் இவர் ஹீரோவா... இல்ல வில்லனா என பலரையும் யோசிக்க வைக்கும் விதமாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் சதீஷ். இவர் நடிப்பில் மட்டும் இன்றி இவரிடம் நாசரின் சாயல் தெரிவதாக நெட்டிசன்கள் சொல்வதுண்டு.

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல..! படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை பரபரப்பு புகார்!
 

Swaminathan

சுவாமிதாதான்:

காற்றுக்கென்ன வேலி சீரியல் மூலம் பிரபலமானவர் சுவாமிநாதன். தற்போது மகாநதி சீரியலில் விஜய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் தோற்றம் பார்ப்பதற்கு இளம் வயது கமல்ஹாசனை நியாபகப்படுத்துவது உண்டு.
 

Vijay Sethupathi

வெற்றி வசந்த்:

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து வரும் ஹீரோ வெற்றி வசந்தின் தோற்றம் ஒரு சாயலில் பார்ப்பதற்கு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போலவே இருக்கும்.

தாய்மையை ரசிக்கும் நடிகை பிரணீதா! வெள்ளை உடையில்... பிரக்னன்சி போட்டோ ஷூட்!

Latest Videos

click me!