இயக்குனர் தனுஷின் அடுத்த ப்ராஜெக்ட்.. அவரே வெளியிட்ட NEEK பட அப்டேட் - சிங்கிள் கம்மிங் சூன்!
Ansgar R |
Published : Aug 26, 2024, 09:44 PM IST
NEEK Update : நடிகர் தனுஷின் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக உள்ளது குறித்து புதிய தகவலை அளித்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்.
இரண்டாவது முறையாக தனுஷ் இயக்குனராக களம் இறங்கிய திரைப்படம் தான் "ராயன்". அது அவருடைய ஐம்பதாவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் வெளியாகி உலக அளவில் சுமார் 158 கோடி ரூபாய் வசூல் செய்து சூப்பர் ஹிட் திரைப்படமாக மாறிய ராயன் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது.
"ராயன்" திரைப்பட பணிகளை முடித்த இயக்குனர் தனுஷ், தெலுங்கு மொழியில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகி வரும் "குபேரா" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். அந்த படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு பாலிவுட் ஷூட்டிங்கும் தனுஷுக்கு பாக்கியுள்ளது.
34
GV Prakash Kumar
இந்த நிலையில் இயக்குனராக தனது மூன்றாவது திரைப்பட பணிகளை துவங்கியுள்ள நடிகர் தனுஷ், "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற படத்தின் பணிகளை துவங்கி இருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 30-ம் தேதி இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
44
NEEK First Single
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" திரைப்படத்தில் இளம் நடிகர், நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல நடிகை அனிகா சுரேந்திரன் மற்றும் இளம் நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.