மக்கள் அனைவரையும் கண்கலங்க வைத்த "வாழை" - OTT ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

First Published | Aug 26, 2024, 7:28 PM IST

Vaazhai OTT Release : மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான "வாழை" திரைப்படம் OTTயில் வெளியாவது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

Pariyerum Perumal

தமிழ் சினிமாவில் "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய இயக்குனர் தான் மாரி செல்வராஜ். இவர் பிரபல இயக்குனர் ராமனிடம் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். இயக்குனர் ராமின் "கற்றது தமிழ்" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரமும் இவர் ஏற்று நடத்திருப்பார். தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுளளார் மாரி.

தொழிலதிபராக மாறும் அடுத்த செலிபிரிட்டி.. வீடியோ வெளியிட்டு புதிர் போட்ட பிரியா அட்லீ!

udhayanidhi stalin

"பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, "கர்ணன்" மற்றும் "மாமன்னன்" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்த மாரி செல்வராஜ், தற்பொழுது பிரபல நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரமை வைத்து "பைசன்" என்கின்ற படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். 

Tap to resize

Vaazhai Movie plot

இந்த சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி "வாழை" என்கின்ற தனது நான்காவது படைப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டார். இளமைக் காலத்தில் திருநெல்வேலி தான் சிறுவனாக இருந்தபொழுது, தான் செய்து வந்த வாழைக்குலை சுமக்கும் பணிகளை அடிப்படையாகக்கொண்டு, பல உண்மைச் சம்பவங்களை கோர்த்து அவர் உருவாக்கிய திரைப்படம் தான் வாழை.

Vaazhai OTT release

கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை இந்த திரைப்படம் பெற்று வரும் நிலையில், இந்த திரைப்படத்தின் OTT ரிலீஸுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் இப்படத்தை வாங்கி உள்ள நிலையில், செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் இதை OTTயில் வெளியிடப்பட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மனோரமாவுடன் மோதல்; தடை போட்ட ரஜினிகாந்த்! காரணம் யார்? ரமேஷ் கண்ணா உடைத்த ரகசியம்!

Latest Videos

click me!