இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை கொண்ட நடிகை இவங்க தான்! பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இல்ல!

First Published | Aug 26, 2024, 5:08 PM IST

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் இந்திய பிரபலங்களின் பட்டியலில் ஷ்ரத்தா கபூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்ட்ரீ 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு 91.9 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ள அவர் பிரியங்கா சோப்ராவை முந்தினார். இந்தியாவில் அதிகம் பின்தொடரப்படும் பிரபலமாக விராட் கோலி உள்ளார்.

Shraddha Kapoor

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் இந்திய பிரபலமாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். அவருக்கு 217 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் அதிக ஃபாலோயர்களை கொண்ட இந்திய பிரபலங்கள் பட்டியலில் ஷ்ரத்தா கபூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Shraddha Kapoor

ஸ்ரத்தாவுக்கு இப்போது 91.9 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். இதன் மூலம் அவர் பிரியங்கா சோப்ராவை பின்னுக்கு தள்ளி உள்ளார். இதற்கு முன்பு 2-வது இடத்தில் இருந்த பிரியங்கா 91.8 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டிருந்தார்.

Tap to resize

Shraddha Kapoor

ஸ்ரத்தா நடிப்பில் கடைசியாக வெளியான ஸ்ட்ரீ 2 படத்தின் மிகப்பெரிய வெற்றி அவரின் ஃபாலோயர்கள் அதிகரிக்க காரணமாகும். இதன் மூலம் அவர் அதிக ஃபாலோயர்களை கொண்ட நடிகையாக மாறி உள்ளார். உலகளவில் 456 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ள ஸ்ட்ரீ 2 படத்தின் வெற்றி, சந்தேகத்திற்கு இடமின்றி அவரின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

Shraddha Kapoor

இதன் மூலம் ஷ்ரத்தா தற்போது கோஹ்லி மட்டுமே ஆக்கிரமித்துள்ள பிரத்யேக 100 மில்லியன் பின்தொடர்பவர்கள் கிளப்பில் சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Shraddha Kapoor

பிரியங்கா சோப்ரா 91.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 91.3 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்,

Shraddha Kapoor

அலியா பட், கத்ரீனா கைஃப், தீபிகா படுகோன் மற்றும் நேஹா கக்கர் ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர். இதனிடையே நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஸ்ரத்தா இருக்கிறார். ஸ்தீரி 2 படத்திற்காக ஷ்ரத்தா 5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!