ஆடம்பர பங்களா; சொகுசு கார்கள்; ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இருவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

First Published | Aug 26, 2024, 4:27 PM IST

பாலிவுட்டின் பிரபல ஜோடிகளில் ஒன்றான ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 1,056 கோடி. துபாயில் ஆடம்பர வில்லா, மும்பையில் பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு கார்கள் என ஏராளமான சொத்துக்களை வைத்துள்ளனர்.

Abhishek Bachchan- Aishwarya Rai Bachchan

பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடியும் ஒன்று.. இந்த ஜோடி 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனவர். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் நாட்டின் பணக்கார ஜோடிகளில் ஒருவர். இருவரின் ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு குறித்தும் அவர்கள் வைத்திருக்கும் விலையுயர்ந்த சொத்துக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

Abhishek Bachchan- Aishwarya Rai Bachchan

ஐஸ்வர்யா ராய் பச்சனின் சொத்து மதிப்பு ரூ.776 கோடி. மறுபுறம், அபிஷேக் பச்சனின் தனிப்பட்ட சொத்து ரூ.280 கோடி என்று கூறப்படுகிறது. எனவே ஐஸ்வர்யா - அபிஷேக் பச்சன் ஜோடியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 1,056 கோடி ஆகும். ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் துபாயின் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றான ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸில் ஒரு ஆடம்பர வில்லாவை வைத்துள்ளனர். வெளிப்புற நீச்சல் குளம், நவீன சமையலறை, ஒரு தனியார் கோல்ஃப் மைதானம், விசாலமான நடைப்பயணம் மற்றும் உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன.

Tap to resize

Abhishek Bachchan- Aishwarya Rai Bachchan

பச்சன் குடும்பத்திற்கு சொந்தமான 5 ஆடம்பரமான பங்களாக்கள் தவிர, ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன்ஜோடி மும்பையில் உள்ள பிரீமியம் ரெசிடென்ஷியல் டவர்களில் பல ப்ளஷ் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளது.

Abhishek Bachchan- Aishwarya Rai Bachchan

மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தின் பிரீமியம் குடியிருப்பு திட்டமான சிக்னேச்சர் தீவில் அமைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் இந்த 5 படுக்கையறை கொண்ட இந்த அபார்ட்மெண்ட்டை வாங்க பச்சன்கள் ரூ. 21 கோடி செலவிட்டுள்ளனர். , ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஸ்கைலார்க் டவர்ஸின் 37வது மாடியில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பையும் வைத்துள்ளனர். .

Abhishek Bachchan- Aishwarya Rai Bachchan

ரியல் எஸ்டேட் தவிர, அபிஷேக் விளையாட்டிலும் முதலீடு செய்துள்ளார். அவர் இரண்டு அணிகளை வைத்துள்ளார்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் என்ற புரோ கபடி அணி மற்றும் சென்னையின் எஃப்சி என்ற இந்தியன் சூப்பர் லீக் அணி.

Abhishek Bachchan- Aishwarya Rai Bachchan

இந்தி திரையுலகில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் சில பிரபலங்களில் பாலிவுட் ஜோடியும் ஒருவர். ரூ.7.95 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost காரை வைத்திருக்கின்றனர். Bentley Continental GT சொகுசு காரும் இந்த ஜோடியிடம் உள்ளது.

Abhishek Bachchan- Aishwarya Rai Bachchan

ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரிடம் Mercedes-Benz GL63 AMG, Mercedes-Benz S-Class S350D, Audi 8L, Lexus LX 570 மற்றும் Mercedes-Benz S500 போன்ற பல கார்கள் இருக்கின்றன.

Latest Videos

click me!