இவங்க தொட்டதெல்லாம் ஹிட்... ஒரு பிளாப் கூட இல்லாமல் 100 சதவீத வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் லிஸ்ட்

Published : Aug 26, 2024, 02:51 PM IST

ஒரு தோல்வி படம் கூட கொடுக்காமல் கோலிவுட்டில் வெற்றி இயக்குனர்களாக வலம் வருபர்வர்கள் டாப் இயக்குனர்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
15
இவங்க தொட்டதெல்லாம் ஹிட்... ஒரு பிளாப் கூட இல்லாமல் 100 சதவீத வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் லிஸ்ட்
Tamil Directors

சினிமா என்பது வெற்றி என்பது அவ்வளவு எளிதாக வந்துவிடாது, அதை தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். அப்படி இருக்கையில் தோல்வியே சந்திக்காத இயக்குனர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி எடுத்த எல்லா படமும் ஹிட் கொடுத்து, ஒரு முறைகூட தோல்வியை சந்திக்காத தமிழ் சினிமா இயக்குனர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
Vetrimaaran

வெற்றிமாறன்

பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே வெற்றிகண்ட இவர், அடுத்தடுத்து இயக்கிய ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை ஆகிய படங்களும் தொடர்ச்சியாக ஹிட் அடித்தன. தோல்வியே சந்திக்காத சீனியர் இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான்.

35
Atlee

அட்லீ

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, ஆர்யா ஹீரோவாக நடித்த ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே கமர்ஷியல் ஹிட் கொடுத்த அட்லீ, அடுத்தடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து 100 சதவீத வெற்றி இயக்குனராக பயணிக்கிறார்.

இதையும் படியுங்கள்... இனி சரக்கு அடிச்ச செருப்பால அடிப்பேன்... ஒரே நாளில் குடிப்பழக்கத்தை கைவிட்ட ரஜினி - காரணம் யார் தெரியுமா?

45
Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய முதல் படமே கவனம் ஈர்த்ததை அடுத்து, கைதி என்கிற மாஸ் ஹிட் படம் மூலம் பிரபலமானார். பின்னர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன லோகேஷ் கனகராஜ், கடைசியாக இயக்கிய விக்ரம், லியோ ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வசூல் சாதனை படைத்தன.

55
Mari Selvaraj

மாரி செல்வராஜ்

கோலிவுட்டில் 100 சதவீத வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் மாரி செல்வராஜும் ஒருவர். பரியேறும் பெருமாள் படத்தில் தொடங்கிய இவரது வெற்றிப்பயணம், கர்ணன், மாமன்னன், வாழை என தொடர்ந்து வருகிறது. இதில் வாழை திரைப்படம் அண்மையில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்... மீனாட்சி அம்மன் கோவிலில் என்னை அசிங்கப்படுத்திட்டாங்க; ஆக்‌ஷன் எடுங்க! அமைச்சரிடம் நடிகை நமீதா பரபரப்பு புகார்

Read more Photos on
click me!

Recommended Stories