எனக்கு சரியான எதிரி இளையராஜா தான்... அவன யாராலும் அழிக்கவே முடியாது - வைரமுத்து ஓபன் டாக்

First Published | Aug 26, 2024, 1:04 PM IST

இளையராஜாவை எவனாலும் அழிக்கவே முடியாது என்றும் அவர் தான் தனக்கு சரியான எதிரி எனவும் கவிஞர் வைரமுத்து ஓப்பனாக சொல்லி இருக்கிறார்.

Ilaiyaraaja vs Vairamuthu

நண்பர்கள் எதிரிகள் ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் சேர்வது மிகவும் கஷ்டம். அப்படித் தான் ஒரு காலத்தில் ஜிகிரி தோஸ்துகளாக இருந்த இளையராஜாவும், வைரமுத்துவும் தற்போது பரம எதிரிகளாக உள்ளனர். இருவரும் சுமார் 5 ஆண்டுகள் மட்டுமே இணைந்து பணியாற்றினர். அந்த 5 ஆண்டுகளில் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். அதன்பின்னர் சண்டை போட்டு பிரிந்த இவர்கள் மீண்டும் இணையவே இல்லை.

Vairamuthu

இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து பிரபலமான மாரிமுத்து, பழைய பேட்டி ஒன்றில் இளையராஜா மற்றும் வைரமுத்து பற்றி பலரும் அறி்ந்திடாத சம்பவம் பற்றி நினைவுகூர்ந்துள்ளார். அதன்படி, வைரமுத்து ஒரு வார இதழில் தொடர் ஒன்றை எழுதினாராம். அதில் இளையராஜா பற்றி ஏன் எழுதவில்லை என எல்லாரும் கேட்பதாகவும், அவனைப் பற்றி எழுதினால் தப்பாகிவிடுமோ என பயந்துகொண்டே இருக்கிறேன் என சொன்னாராம் வைரமுத்து.

இதையும் படியுங்கள்... ஔிப்பரப்பான அரை மணிநேரத்தில் வீடு தேடி வந்துட்டாங்க... நீயா நானா பார்த்து விஜய் செய்த பேருதவி

Tap to resize

Marimuthu

நான் ஒருவேளை இளையராஜாவுக்கு ஐஸ் வைக்குற மாதிரி எழுதுகிறேன் என்றும் ஆகிவிடக்கூடாது. இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள் பட்டியல்ல இளையராஜா தான் முதல்ல வரணும்னு சொல்லிக்கொண்டே இருந்த வைரமுத்து ஒரு நாள் இளையராஜா பற்றி எழுத முடிவு செய்துவிட்டாராம். அப்போது, கடந்த 15 வருடங்களாக தமிழ்நாட்டு காற்று உன் குத்தகையிலேயே இருக்கிறது என எழுதிக்கொண்டிருக்கும்போது தூரத்தில் ஒரு பாடல் ஒலித்திருக்கிறது.

Vairamuthu says about Ilaiyaraaja

‘நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி’ என இளையராஜா பாடிய பாட்டு தூரத்தில் ஒலித்துக்கொண்டிருந்ததை கேட்ட வைரமுத்து, கையில் இருந்த பேப்பர் பேனாவை தூக்கி எறிந்துவிட்டு அவனை யாராலையும் அழிக்கவே முடியாதுனு சொன்னாராம். அவன் பெரிய ஆள், எனக்கு சரியான எதிரி என்றால் அது அவன் மட்டும் தான் என வைரமுத்து சொன்னதாக நடிகர் மாரிமுத்து அந்த நேர்காணலில் கூறி இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... பூங்கொடி டீச்சருக்காக... மாரி செல்வராஜ் பாடிய பாடல்! மனுஷனுக்கு பல திறமை இருக்கும் போலயே..! - வீடியோ

Latest Videos

click me!