கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல..! படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை பரபரப்பு புகார்!

First Published | Aug 26, 2024, 11:21 AM IST

ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பின்னர், பல நடிகைகள் தொடர்ந்து... தங்களுக்கு நடந்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து மீண்டும் பேச துவங்கியுள்ள நிலையில் பிரபல நடிகர் ரியாஸ் கான் மீது நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
 

Hema committee

கடந்த 2017-ஆம் ஆண்டு தென்னிந்திய திரையுலகை பரபரப்பால் பற்றி எரிய வைத்தது #MeToo இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களின் பெயர் வெளியாகி டேமேஜ் ஆகியுள்ள நிலையில்,  ஹேமா அறிக்கைக்கு பின்னர் மீண்டும் நடிகைகள் சில நடிகர்களின் பெயரை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.
 

Revathi Sampath Complaint

அந்த வகையில் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை ரேவதி சம்பத், தென்னிந்திய திரையுலகில் வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படும்... ரியாஸ் கான் மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உள்ளோர் தொலைக்காட்சி சேனல் ஒன்றிருக்கு ரேவதி சம்பத் பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார்.

தங்க சிலை போல் இருக்கும் நடிகை ரேவதியின் மகள் மகி! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

Tap to resize

Actor Riyaz Khan

தன்னுடைய என்னை, புகைப்பட கலைஞர் ஒருவர் ரியாஸ்கானுக்கு அனுப்பிய நிலையில், என்னை இரவு நேரத்தில் தொடர்பு கொண்ட ரியாஸ்கான் அநாகரீகமாக போன் செய்து, பாலியல் உறவில் ஆர்வம் உள்ளதா என கேட்டு வற்புறுத்தும் வகையில் பேசியதாக தெரிவித்துள்ளார். தன்னை மட்டும் இன்றி தன்னுடைய தோழிக்கும் இதே போல் தொந்தரவு கொடுத்ததாக ரேவதி சம்பத் கூறியுள்ளார்.

Harassment Complaint

இதுகுறித்து திரைப்பட ரியாஸ்கானை தொடர்பு கொண்டு... பிரபல நிருபர் ஒருவர் கேட்டபோது தனக்கு ரேவதி சம்பத் என்பவர் யார் என்றே தெரியாது என கூறியுள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது. ரியாஸ் கான் மீது இதுவரை தென்னிந்திய திரையுலகில் எந்த ஒரு நடிகையும் இப்படி ஒரு புகாரை முன்வைக்காத நிலையில், ரேவதி சம்பத்தின் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீ தான் எல்லாத்துக்கும் காரணம்.! சமந்தாவால் பெத்த பிள்ளை நாக சைதன்யா மீது கடும் கோபத்தில் லட்சுமி டகுபதி!

Riyaz khan Movies

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ரியாஸ் கான்... குறிப்பாக தமிழில் சூர்யாவுடன் கஜினி, பிரஷாந்துடன் வின்னர், பாபா, கமல்ஹாசனுடன் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு மற்றும் பொன்னியின் செல்வன் பாகங்கள் 1 மற்றும் 2 ஆகியவற்றிலும் நடித்திருந்தார்.

Latest Videos

click me!