நாட்டாமை படத்தில் வரும் கொய்ங்க் சத்தம்; இதுக்கு பின்னாடி இப்படி ஒரு சீக்ரெட்டா?

First Published | Aug 26, 2024, 11:13 AM IST

நாட்டாமை படத்தில் சரத்குமார், கவுண்டமணியை அறையும் காட்சியில் வரும் கொய்ங் சத்தம் எப்படி உருவானது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்.

Nattamai

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான படம் நாட்டாமை. சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படத்தில் குஷ்பு, மீனா, விஜயகுமார், மனோரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. 
 

Nattamai

காதல், காமெடி, குடும்ப செண்டினெண்ட், பாடல், ஆக்ஷன் என பக்கா கமர்ஷியல் படமாக இந்த படம் இருந்தது. நாட்டாமை படத்தின் எவர்க்ரீன் காமெடி காட்சிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

Tap to resize

Nattamai

அந்த வகையில் நாட்டாமை தம்பி டீச்சரை வச்சிருக்காருடா என்ற காமெடி காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த டயலாக்கை அண்ணன் சரத்குமாரிடம் சொல்லும் போது, அவர் கவுண்டமணி கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுவார். அப்போது கொய்ங் என்ற சத்தம் 10 வினாடிகளுக்கு காதை பிளக்கும். ஆனால் அந்த சத்தத்தை எப்படி உருவாக்கினார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Director K S Ravikumar

இந்த காட்சியை எடுத்த பின்பு, ஏவிஎம் ஸ்டூடியோவில் சவுண்ட் ரெக்கார்டிங்கின் போது ஒலிக்கலவையை பார்த்தாராம். சரத்குமார் கவுண்டமணியை அடிக்கும் காட்சி வரும் போது வேறு எந்த ஒலியும் வராமல் ஒரு பீப் சவுண்ட் மட்டும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கே.எஸ். ரவிகுமார் கூறியுள்ளார். அப்போது சவுண்ட் இன்ஜியனரும் பல வகைகளை ஒலிகளை போட்டுக் காண்பித்துள்ளார். ஆனால் கே.எஸ். ரவிக்குமாருக்கு எந்த ஒலியிலும் திருப்தி ஏற்படவில்லை.

K S Ravikumar

அப்போது திடீரென மின் தடை ஏற்பட்டதால் ஜெனரேட்டரில் இருந்து கொய்ங் என்ற சத்தம் வந்துள்ளது. அப்போது கே.எஸ்.ரவிக்குமார் அந்த சத்தத்தை ரெக்கார்ட் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு சவுண்ட் இன்ஜினியரும் ஓ.கே சொல்ல அந்த சத்தத்தை ரெக்கார்டிங் செய்து படத்தின் நகைச்சுவை காட்சியில் பயன்படுத்தினார்களாம். நாட்டாமை படத்தை தொடர்ந்து அந்த காலக்கட்டத்தில் வெளியான படங்களிலும் அந்த ஒலி பயன்படுத்தப்பட்டிருக்கும். 

Latest Videos

click me!