நடிகர் சின்னிஜெய்ந்த் மகன் திருமண விழா! முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்து!

First Published | Aug 26, 2024, 11:43 AM IST

பழம்பெரும் காமெடி நடிகர் சின்னிஜெய்ந்த் மகனும், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியருமான ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதிஸ்டாலின், பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட பல அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
 

Chinni Jayanth's son's wedding ceremony

காமெடி நடிகர் சின்னிஜெயந்த் 1980-90களில் ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமகா இருந்தார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சின்னிஜெய்ந்த், அஷ்டலட்சுமி கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
 

Chinni Jayanth's son's wedding ceremony

டாக்டர் மகன் டாக்டர், அரசியல்வாதி மகன் அரசியல்வாதி, நடிகர் மகன் நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டு வரும் உலகில் தன் மகனை ஒரு ஐஏஎஸ் ஆக்கி அழகு பார்த்திருக்கிறார் சின்னிஜெயந்த், ஆம், மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி, நாட்டிலேயே 75வது ரேங்க் வாங்கி வெற்றி பெற்றார். முசோரியில் பயிற்சி முடித்து பணியை தொடங்கிய ஸ்ருதன் தற்போது விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியாரக உள்ளார்.
 

Tap to resize

Chinni Jayanth's son's wedding ceremony

இந்நிலையில் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் சின்னி ஜெயந்த் திரைபிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார். நேற்று, ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு திருமணம் நடைபெற்றது. இஆப மானஸ்வி என்பவரை கரம்பிடித்தார். இந்த திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னாள் அமைச்சர் மகனுடன் காதல்... கமுக்கமாக நடந்து முடிந்த நடிகை மேகா ஆகாஷ் நிச்சயதார்த்தம் - திருமணம் எப்போ?
 

Latest Videos

click me!