முன்னாள் அமைச்சர் மகனுடன் காதல்... கமுக்கமாக நடந்து முடிந்த நடிகை மேகா ஆகாஷ் நிச்சயதார்த்தம் - திருமணம் எப்போ?
முன்னாள் அமைச்சரின் மகன் சாய் விஷ்ணுவை காதலித்து வரும் நடிகை மேகா ஆகாஷ் அவரை விரைவில் கரம்பிடிக்க உள்ளார்.
Megha Akash
நடிகை மேகா ஆகாஷ் கடந்த 1995-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை லேடி ஆண்டாள் ஸ்கூலில் முடித்தார். இதையடுத்து சென்னையில் உள்ள கிறிஸ்டியன் கல்லூரியில் B.Sc படித்து முடித்த மேகா ஆகாஷ், முதன்முதலில் நடித்த படம் ஒரு பக்க கதை. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கி இருந்தார்.
Megha Akash Engagement
ஒரு பக்க கதை திரைப்படம் தாமதம் ஆனதால் தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படம் அவரின் அறிமுக படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படம் தாமதம் ஆனதால், ரஜினியின் பேட்ட படம் தான் மேகா ஆகாஷுக்கு முதல் படமாக அமைந்தது. அப்படத்தில் மேகா ஆகாஷின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.
Megha Akash Family
பின்னர் தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்து கிடப்பில் போடப்பட்டு இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள்... கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல..! படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை பரபரப்பு புகார்!
Megha Akash Engagement Photos
சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக உள்ள மேகா ஆகாஷ், தற்போது திருமணத்துக்கு தயாராகி வருகிறார். அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை வருகிற செப்டம்பர் மாதம் கரம்பிடிக்க உள்ளார். சாய் விஷ்ணு வேறுயாருமில்லை முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் மகன் தான்.
Megha Akash, Saai Vishnu
சாய் விஷ்ணுவும், மேகா ஆகாஷும் கடந்த ஆறு ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
Megha Akash, Saai Vishnu Engagement
மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடியின் திருமணம் வருகிற செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நாட்டாமை படத்தில் வரும் கொய்ங்க் சத்தம்; இதுக்கு பின்னாடி இப்படி ஒரு சீக்ரெட்டா?