புறக்கணிக்கப்படுகிறார்களா தமிழ் நடிகைகள்? கோலிவுட்டில் அதிகம் கவனம் ஈர்த்த 5 மலையாள நடிகைகள்!

First Published | Aug 26, 2024, 4:47 PM IST

கோலிவுட் திரையுலகில் மலையாள நடிகைகளின் வரத்துக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது, என்றாலும்... கடந்த இரண்டு வருடத்தில்... திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த 5 மலையாள நடிகைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
 

Parvathy Thiruvothu:

பார்வதி திருவோத்து:

பூ படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பார்வதி திருவோத்து, இதை தொடர்ந்து... தனுஷுக்கு ஜோடியாக மரியான் படத்தில் நடித்தார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது. இந்த படத்திற்கு பின்னர் சென்னையில் ஒரு நாள், பெங்களூர் டேஸ் போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது 'தங்கலான்' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பு அரக்கி என ரசிகர்கள் கூறும் அளவிற்கு பர்ஃபாமென்சில் வெளுத்தி வாங்கி உள்ளார் பார்வதி. மேலும் இவரின் நடிப்பும் முந்தைய படங்களை விட இந்த படத்தில் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளது.

Nikila Vimal

நிகிலா விமல்:

நடிகை நிகிலா விமல், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக வெற்றிவேல் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடந்து மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தமிழிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில், போர் தொழில் படத்தின் வெற்றியை தொடர்ந்து நிகிலா தற்போது வெளியாகியுள்ள 'வாழை' படத்தில் பூங்கோடி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து... ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார்.

தாய்மையை ரசிக்கும் நடிகை பிரணீதா! வெள்ளை உடையில்... பிரக்னன்சி போட்டோ ஷூட்!

Tap to resize

Nimisha Sajayan:

நிமிஷா சஜயன்:

2017-ஆம் ஆண்டு, மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் டார்க் ஸ்கின் அழகி நிமிஷா சஜயன். மலையாளத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்திய இவரை... சித்தா படத்தின் மூலம், தமிழில் அறிமுகமானவர் தான் நிமிஷா. இதை தொடர்ந்து இவர் நடித்த 'ஜிகிர்தண்டா டபிள் எக்ஸ்' மற்றும் 'மிஷன் சேப்டர் 1' போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

Anna Ben

அன்னா பென்: 

2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'கும்மலாக்கி நைட்ஸ்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் 'அன்னா பென்'. இந்த படத்திற்க்கு பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்த இவர்... தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அன்னா பென் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.    

மூட்டை தூக்கி படிக்கும் மாணவன்; தளபதியை தொடர்ந்து உதவ முன்வந்த இசையமைப்பாளர் தமன்!

Manju Warrier:

மஞ்சு வாரியர்.

'அசுரன்' திரைப்படத்தின் மூலம், தனுஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் மஞ்சு வாரியர். இந்தியா தொடர்ந்து துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தற்போது ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படம், மற்றும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் மூலம் தற்போது... மலையாள படங்களை விட தமிழில் பிசியாகி உள்ளார் மஞ்சு வாரியர்.

Latest Videos

click me!