தாய்மையை ரசிக்கும் நடிகை பிரணீதா! வெள்ளை உடையில்... பிரக்னன்சி போட்டோ ஷூட்!
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை பிரணீதா சுபாஷ், தன்னுடைய லேட்டஸ்ட் பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட, அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு... லைக்குகளை குவித்து வருகிறது.
Pranita Subhash Debut Movie
பெங்களூரை சேர்ந்தவர் நடிகை பிரணீதா சுபாஷ். இளம் வயதிலேயே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த இவர், கன்னடத்தில் 'போர்கி' என்கிற திரைப்படத்தின் மூலம் 2010-ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.
Pranita Subhash Tamil movie
இதைத் தொடர்ந்து, அதே ஆண்டு 'எம் பிலோ எம் பிலடு', 'பாவா' போன்ற தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிரணீதா 2011 ஆம் ஆண்டு இயக்குனர் சாப்ளின் இயக்கிய 'உதயம்' திரைப்படத்தின் தமிழில் அறிமுகமான நிலையில், இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார். சொல்லிக்கொள்ளும்படி இப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும் கார்த்திக்கு ஜோடியாக நடித்த 'சகுனி' தரமான வெற்றியை பதிவு செய்தது.
மூட்டை தூக்கி படிக்கும் மாணவன்; தளபதியை தொடர்ந்து உதவ முன்வந்த இசையமைப்பாளர் தமன்!
Pranita Subhash movie chances
தமிழ் படங்கள் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வந்ததால்... குறிப்பிட்ட தமிழ் பட வாய்ப்புகளை மட்டுமே பிரணீதா ஏற்றுக்கொண்டார். அந்த வகையில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இவர் நடித்த மாஸ் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானபோதிலும், மோசமான தோல்வியை தழுவியது.
Pranita Subhash Tamil flop movie
பின்னர் அதர்வாவுடன் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தில் நடித்தார். மற்ற மொழிகளிலும் இவர் நடித்த படங்கள்... தோல்வியை சந்தித்தால், பட வாய்ப்புகள் இவருக்கு குறைய துவங்கியது. எனவே கொரோனா காலத்தில், தன்னுடைய காதலர் நிதின் ராஜு என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல..! படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை பரபரப்பு புகார்!
Pranita Subhash Pregnancy Photo shoot
இந்த ஜோடிக்கு தற்போது இரண்டு வயதில் மகள் ஒருவரும் உள்ளார். அண்மையில் பிரணீதா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்ததை தொடர்ந்து, இவருக்கு கணவர் விமர்சியாக பேபி ஷவர் நடத்தி அழகு பார்த்தார்.
Pranita Subhash viral photos
இதை தொடர்ந்து தன்னுடைய தாய்மையை ரசித்து, வெள்ளை நிற மாடர்ன் உடையில்.... பிரணீதா எடுத்து கொண்ட போட்டோ ஷூட் தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
பூங்கொடி டீச்சருக்காக... மாரி செல்வராஜ் பாடிய பாடல்! மனுஷனுக்கு பல திறமை இருக்கும் போலயே..! - வீடியோ