மனோரமாவுடன் மோதல்; தடை போட்ட ரஜினிகாந்த்! காரணம் யார்? ரமேஷ் கண்ணா உடைத்த ரகசியம்!

First Published | Aug 26, 2024, 6:50 PM IST

பிரபல இயக்குனரும், காமெடி நடிகருமான ரமேஷ் கண்ணா... முதல் முறையாக ரஜினிகாந்த் மற்றும் மனோரம்மா இடையே இருந்த பிரச்சனை குறித்து, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 

Ramesh Khanna

நடிகர், டயலாக் ரைட்டர், இயக்குனர், என பன்முக திறமையோடு தமிழ் சினிமாவை வலம் வருபவர் ரமேஷ் கண்ணா. ஆர் எஸ் மனோகரின் டிராமா குரூப்பில் தன்னுடைய ஐந்து வயதில் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய ரமேஷ் கண்ணா, இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிராமாக்களில் நடித்துள்ளார்.

Ramesh Khanna Movies

தன்னுடைய டிராமா மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்தே, வெள்ளித்திரைக்கு வாய்ப்பு தேடி வந்தார். அதன்படி 1983 ஆம் ஆண்டு, பாக்யராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், பின்னர் ஆண்பாவம், ஏட்டிக்கு போட்டி, அபிராமி, கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், ஆத்மா, கேப்டன், முத்து, போன்ற பல படங்களில் நடித்தார்.

புறக்கணிக்கப்படுகிறார்களா தமிழ் நடிகைகள்? கோலிவுட்டில் அதிகம் கவனம் ஈர்த்த 5 மலையாள நடிகைகள்!

Tap to resize

KS Ravikumar

அவ்வை சண்முகி திரைப்படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருக்கு, துணை இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் கண்ணா... 1988 ஆம் ஆண்டு 'டாப் டக்கர் 'என்கிற சன் டிவி சீரியலில் இயக்கத்தை தொடங்கினார். பின்னர் அஜித்தை வைத்து 'தொடரும்' என்கிற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Rajinikanth and Manorama

இவர் இயக்கிய திரைப்படத்தை விட இவர் நடித்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பு இவரை முழு நடிகராகவே மாற்றியது. அதேபோல் ராசாத்தி வரும் நாள், பெரிய குடும்பம், முனி, நம் நாடு, ஆதவன், போன்ற படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றியுள்ளார். ரமேஷ் கண்ணா,அண்மையில் ரஜினிகாந்த் மற்றும் மனோரமா இடையே நடந்த பிரச்சனை குறித்து கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்மையை ரசிக்கும் நடிகை பிரணீதா! வெள்ளை உடையில்... பிரக்னன்சி போட்டோ ஷூட்!
 

Rajini And Manorama Movies

அதாவது ரஜினிகாந்துடன் எஜமான், அண்ணாமலை, அருணாச்சலம், மன்னன், போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் மனோரமா. பெரும்பாலும் இவர்கள் இருவரும் அம்மா - மகன் கதாபாத்திரங்களில் நடிகன் நடிப்பதுண்டு. அப்படி இவர்கள் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை.

Ramesh khanna Interview

என்னதான் ரஜினிகாந்துடன் மனோரமா நடித்திருந்தாலும், அவர் எம்ஜிஆர் - ஜெயலலிதா காலத்தில் இருந்தே மிகவும் பிரபலமானவர். ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியாகவும் இருந்துள்ளார். எனவே ஜெயலலிதாவின் அரசியலை ஒரு விசுவாசி போல் ஆதரித்தவர் மனோரம்மா. இதன் காரணமாகவே ரஜினிகாந்துக்கும்  மனோரமாவுக்கும் இடையே சில பிரச்சனை வெடித்ததாகவும்.. எனவே தன்னுடைய சில படங்களில் ரஜினிகாந்த் மனோரமாவே நடிக்க வேண்டாம் என தடை போட்டதாகவும் இந்த பேட்டியில் ரமேஷ் கண்ணா கூறி உள்ளார்.

மூட்டை தூக்கி படிக்கும் மாணவன்; தளபதியை தொடர்ந்து உதவ முன்வந்த இசையமைப்பாளர் தமன்!

Jayalalithaa Is Reason

பின்னர் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர், மீண்டும் இருவரும் சகஜமாக பேச தொடங்கியதாகவும் அதன் பின்னர் மனோரம்மா ரஜினிகாந்திடம் பேசினாராம். இந்த தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!