பின்னால் வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.. ஜெயசூர்யா, முகேஷ் உள்ளிட்ட நடிகர்கள் மீது பாலியல் புகார்!

First Published | Aug 26, 2024, 8:32 PM IST

Minu Muneer : கேரள திரையுலகமே இப்பொது ஹேமா கமிட்டியின் அறிக்கையால் அதிர்ந்து நிற்கிறது என்றே கூறலாம். தினமும் ஒரு புது புகார் வந்தவண்ணம் உள்ளது.

Actress Minu muneer

கடந்த சில நாள்களாகவே, மலையாள திரையுலகில் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து அதிக அளவில் விவாதம் நடந்து வருகிறது. இந்த சூழலில் மலையாள நடிகை ஒருவர் பிரபல நடிகர்கள் நால்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிரபல மலையாள நடிகை மினு முனீர், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை பற்றி தெரிவித்துள்ளார்.

தளபதியின் த.வெ.க.. விரைவில் இணையும் நடிகை ரோஜா? தீயாய் பரவும் தகவல் உண்மையா?

Mollywood Actress Minu

இது குறித்து நடிகை மினு தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பதிவுகள் வைரலானது, அந்தப் பதிவில், மீனு எழுதியிருப்பதாவது : கடந்த 2013-ம் ஆண்டு, ஒரு படத்தில் பணிபுரிந்தபோது, ​​முகேஷ், மணியணிபிள்ளை ராஜு, Edavela பாபு மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் தன்னை உடல் ரீதியாகவும், வார்த்தைகளாலும் துன்புறுத்தியதாக கூறியுள்ளார். நான் அவர்களுடன் ஒத்துழைத்து தொடர்ந்து வேலை செய்ய முயற்சித்தேன், ஆனால் அவர்களின் சீண்டல் என்னால் தாங்கமுடியவில்லை. அவர்கள் செய்த இந்த தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உங்கள் உதவியை நான் நாடுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Tap to resize

Actor Jayasurya

மேலும் இந்த நிகழ்வு குறித்து பிரபல செய்தி நிறுவனத்திடம் பேசிய மினு, "ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது எனக்கு மிகவும் மோசமான அனுபவம் ஏற்பட்டது. நான் டாய்லெட்டுக்கு போயிருந்தேன், வெளியே வந்ததும் நடிகர் ஜெயசூர்யா என்னை பின்னாலிருந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். திடுக்கிட்டுப்போன நான் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடினேன். மேலும் ஜெயசூர்யா, தன்னுடன் இருக்க சம்மதித்தால் தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறியதாகவும், மினு கூறினார்.

Edavela babu

தன்னை பிளாட்டுக்கு அழைத்து அநாகரீகமாக நடத்திய மற்றொரு சம்பவத்தையும் நடிகை மினு குறிப்பிட்டுள்ளார். உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மலையாள திரைப்பட கலைஞர்களின் செயலாளரான Edavela பாபுவை அணுகியதாக அவர் கூறினார். மேலும் திரைப்பட சங்கத்தில் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க தன்னை, அவரது குடியிருப்புக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறியுள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை.. ஒட்டுமொத்த கேரள நடிகர்களை குறை சொல்வது தப்பு - கொந்தளித்த சீரும் பார்வதி!

Latest Videos

click me!