மாரிசெல்வராஜ் என்னை பளார்னு அறைஞ்சாரு.. பேட்டியில் ஓப்பனாக பேசிய பரியேறும் பெருமாள் பட நடிகர்!

First Published | Aug 26, 2024, 10:40 PM IST

Nellai Thangaraj : மறைத்த நாடக கலைஞர் மற்றும் திரைப்பட நடிகர் நெல்லை தங்கராஜ், முன்பு ஒருமுறை பரியேறும் பெருமாள் படம் குறித்து பேசியிருந்தார்.

Nellai thangaraj

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதல் முறையாக வெளியான திரைப்படம் தான் "பரியேறும் பெருமாள்". தமிழ் மக்களை மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் பல முன்னணி இயக்குனர்களை கூட வெகுவாக கவர்ந்த ஒரு திரைப்படம் பரியேறும் பெருமாள் என்றால் அது நிச்சயம் மிகையல்ல. அந்த அளவிற்கு நேர்த்தியான கதைகளத்தை கையாண்டிருப்பார் மாரி செல்வராஜ்.

இயக்குனர் தனுஷின் அடுத்த ப்ராஜெக்ட்.. அவரே வெளியிட்ட NEEK பட அப்டேட் - சிங்கிள் கம்மிங் சூன்!

Mari Selvaraj Movie

உண்மையில் மாரி செல்வராஜிற்கு "பரியேறும் பெருமாள்" இயக்குனராக முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு அறிமுக இயக்குனரைப்போல இல்லாமல் மிக நேர்த்தியாக அந்த படத்தை எடுத்து அசத்தியிருப்பார் அவர். அதுமட்டுமல்ல கயல் ஆனந்தி, நடிகர் கதிர், நாடகக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உள்ளிட்ட சிறந்த நடிகர்களையும் தனது படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

Tap to resize

Actor Nellai Thangaraj

கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நெல்லை தங்கராஜ் காலமானார், ஆனால் அதற்கு முன்பாக "பரியேறும் பெருமாள்" திரைப்படம் குறித்தும், அந்த திரைப்படத்தில் தனக்கு நடந்த ஒரு கசப்பான அனுபவம் குறித்தும் அவர் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்திருந்தார். அதில் தன்னை மாரி செல்வராஜ் கன்னத்தில் அறைந்ததாக அவர் கூறியிருந்தார். 

Artist Nellai Thangaraj

அதைப்பற்றி அவர் பேசும் பொழுது "நாயகன் கதிர் என்னிடம் வந்து பேசுவது போன்ற ஒரு காட்சி, அதில் ஒரு சிறிய வசனத்தை நான் மறந்து விட்டேன். உடனே என்னிடம் வந்த மாரி செல்வராஜ், என்னை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். நான் அழுது கொண்டே படத்தில் இருந்து விலகுவதாக கூறினேன், நீங்கள் தானே என்னை நடிக்க கூப்பிட்டீர்கள்.. நானா வருகிறேன் என்று கூறினேன் என்று சொல்ல, மாரி செல்வராஜ் என்னை ஆசுவாசப்படுத்தி அவர் கண்களும் கலங்கியது. 

இந்த டயலாக்கை நீங்கள் பலமுறை ரிகர்சல் பார்த்தீர்கள், இருந்தாலும் சரியாக டேக்கில் வரவில்லை என்று கோபப்பட்டு விட்டேன், என்று என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் கூறினார் மறைந்த நாடகக் கலைஞர் நெல்லை தங்கராஜ்.

பின்னால் வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.. ஜெயசூர்யா, முகேஷ் உள்ளிட்ட நடிகர்கள் மீது பாலியல் புகார்!

Latest Videos

click me!