லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்.. கூலி படத்தில் ஒரு மரண மாஸ் கேமியோ - எந்த நடிகர் தெரியுமா?

First Published | Aug 26, 2024, 11:56 PM IST

Coolie Movie : கூலி திரைப்படத்தில் ஒரு மரண மாஸ் டாப் ஹீரோ, கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jailer Movie

"ஜெயிலர்" திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரே ஆண்டில் இரண்டு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளில் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஏற்கனவே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் "வேட்டையன்" திரைப்பட பணிகளை முழுமையாக முடித்துள்ள அவர், இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 171-வது திரைப்படமான "கூலி" திரைப்பட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

மூணு சிசேரியன் தாங்கியிருக்காங்க.. என் வலியெல்லாம் ஒன்னுமே இல்ல - மனைவி பற்றி எமோஷனலாக பேசிய SK!

Leo Movie

"லியோ" திரைப்படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக துவங்கிய திரைப்படம் தான் "கூலி". முற்றிலும் மாறுபட்ட ஒரு கிளாசிக் ரஜினிகாந்தை இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மக்களுக்கு அளிக்க உள்ளார் என்பது, ஏற்கனவே வெளியான இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தின் மூலம் அறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Rajini Coolie movie

விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் சத்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், நடிகை மற்றும் பாடகி சுருதிஹாசன் மற்றும் கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. நடிகை சோபனாவும் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Aamir Khan

இந்நிலையில் தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களின்படி, பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான அமீர் கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து, இந்த கூலி திரைப்படத்தில் ஒரு சிறு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அவர் இந்த திரைப்படத்தில் நடிக்கும் பட்சத்தில், அமீர் கான் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாக மாறும். பாலிவுட்டில், லோகேஷ் கனகராஜ் அமிர் கானை வைத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், கமல், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் சாயலில் உள்ள சீரியல் ஹீரோஸ்!

Latest Videos

click me!