ஆர்த்திக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் - மனைவி குறித்து சிவகார்த்திகேயன் உருக்கம்

Published : Sep 03, 2025, 10:18 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தி பற்றி மதராஸி பட புரமோஷனின் போது பேசி இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Sivakarthikeyan Says About His Wife Aarthi

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதராஸி பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது தன்னுடைய மனைவி ஆர்த்தி பற்றி பேசி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்படி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை மணந்த மனைவி ஆர்த்திக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். தன்னை கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் தன்னை திருமணம் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

24
மனைவி பற்றி சிவகார்த்திகேயன் கூறியதென்ன?

மேலும் அவர் கூறியதாவது "நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி என்னை மணந்தார். சினிமா என்பது ஒரு தொழில், திறமையானவர்களை எப்போதும் அங்கீகரிக்கும். ஆனால், எனக்கு நல்ல சம்பளம் கூட இல்லாத நேரத்தில், என்னால் அவரைக் கவனித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் அவர் என்னை மணந்தார். அதற்காக நான் எப்போதும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்," என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

34
மதராஸி ரிலீஸ்

'அமரன்' படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'மதராஸி'. இப்படத்தில் பிஜு மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது பிஜு மேனனின் ஒன்பதாவது தமிழ் படம். வித்யுத் ஜம்வால், சஞ்சய் தத், விக்ராந்த், ருக்மிணி வசந்த் ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு சுதீப் இளமன், இசை அனிருத் ரவிச்சந்தர், இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

44
அமரன் சக்சஸ்

'அமரன்' திரைப்படம் 2024 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. உலகளவில் 334 கோடி ரூபாய் வசூலித்தது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்த இப்படத்தில் சாய் பல்லவி, பூவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், சியாம் பிரசாத், சியாம் மோகன், கீது கைலாஷ், விகாஸ் பங்கர், மிர் சல்மான் ஆகியோர் நடித்தனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரித்தன. 2024 அக்டோபர் 31ந் தேதி தீபாவளி விருந்தாக இப்படம் ரிலீஸ் ஆனது.

Read more Photos on
click me!

Recommended Stories