சின்னத்திரை சீரியல்களின் கிங் ஆக இருக்கும் சன் டிவியில் ஒரே நேரத்தில் மூன்று புத்தம் புது சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன. அது என்னென்ன சீரியல்கள் என்பதை பார்க்கலாம்.
சின்னத்திரை சீரியல்கள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சன் டிவி தான். அந்த அளவுக்கு தரமான சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது சன் டிவி. டிஆர்பியிலும் சன் டிவி தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சீரியல்கள் தான். அந்த வகையில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன் டிவி, தற்போது மூன்று புத்தம் புது சீரியல்களை களமிறக்க தயாராகி இருக்கிறது. அது என்னென்ன சீரியல்கள் என்பதையும், எப்போது ஒளிபரப்பாகும் என்பதையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
நாகமணி சீரியல்
சன் டிவியில் களமிறங்க உள்ள மூன்று சீரியல்களில் ஒன்று தான் நாகமணி. இது ஒரு டப்பிங் சீரியல். இந்தியில் Ishq Ki Dastaan - Naagmani என்கிற பெயரில் ஒளிபரப்பான சீரியலின் தமிழ் டப்பிங் தான் இந்த நாகமணி. இந்தியில் சக்கைப்போடு போட்ட இந்த சீரியலை 3 ஆண்டுகளுக்கு முன்பே டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு இருந்தது சன் டிவி. ஆனால் அந்த சமயத்தில் சரியான டைம் ஸ்லாட் கிடைக்காததால் கைவிட்டனர். இந்த சீரியலை இரவு 10.30 அல்லது 11 மணிக்கு ஒளிபரப்ப அதிகம் வாய்ப்பு உள்ளது. நாகிணி சீரியலை போல் நாகமணி சீரியலும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
34
வீர ஹனுமன்
சன் டிவியில் இதிகாச தொடர்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அந்த வகையில், தற்போது இராமாயணம் சீரியல் சக்கைப்போடு போட்டு வருகிறது. அந்த சீரியல் இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ள மற்றுமொரு புராண கதையம்சம் கொண்ட தொடர் தான் வீர ஹனுமன். இந்த தொடர் இராமாயணத்துக்கு பதிலாக மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இராமாயணத்தை போல் வீர ஹனுமன் தொடருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலும் இந்தியில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட சீரியல் தான்.
சன் டிவியில் களமிறங்கும் மற்றோரு புது சீரியலின் பெயர் பராசக்தி. இதில் ரீமேக் தொடரல்ல. இந்த தொடரில் பவன் சந்திராவும் தேப்ஜானியும் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே மிஸ்டர் மனைவி சீரியலில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது பராசக்தி தொடரிலும் அவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். மேலும் நடிகர் விஜயகுமார், ரமேஷ் கண்ணா, அஜய் ஆகியோரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த தொடர் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.