ஸ்கூலை விட்டு எஸ்கேப் ஆகும் கிரீஷ்... அருணால் கைது செய்யப்படும் முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

Published : Sep 03, 2025, 08:54 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்கூலில் இருந்து கிரீஷ் எஸ்கேப் ஆனதால் முத்துவுக்கு பேராபத்து காத்திருக்கிறது. அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Siragadikka aasai serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் அருண் முத்து மீது சுமத்தியது பொய் குற்றச்சாட்டு என்பதை சீதாவும், மீனாவும் கண்டுபிடித்துவிடுகிறார்கள். கையும் களவுமாக அருண் சிக்கியதை அடுத்து சீதாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் சீதாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி இதுபோன்ற வேலையை செய்ய உங்களுக்கு மனசு வந்தது என கண்டபடி திட்டுகிறார் சீதா. எதுக்கு இந்த மாதிரி வேலையை பண்ணீங்க என மீனாவும் கேட்கிறார். அப்படி என்ன அவர் உங்களை கொடுமை பண்ணிவிட்டார். சொல்லப்போனால் நீங்க தான் அவருக்கு நிறைய இடத்தில் தொல்லை கொடுத்திருக்கீங்க என சாடுகிறார் மீனா.

24
அருணை வெளுத்துவாங்கிய மீனா

கல்யாணத்துக்கு முன்னாடியே நான் உங்ககிட்ட சொல்லிருக்கேன். என் தங்கச்சி விரும்புகிறாள் என்கிற ஒரே காரணத்தால் தான் அவளை உங்களுக்கு கட்டிவைத்தேன். ஆனா என்னோட புருஷனோட மரியாதைக்கு ஏதாச்சும் களங்கம் வந்தால் நான் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன். உங்க மனசுல இன்னும் இவ்வளவு வன்மம் இருக்குல்ல. அவர் மேல இருக்குற கோபத்துல எதுக்கு ஏன் தங்கச்சியை ஏமாத்துறீங்க. அவ உங்கள நம்பி வந்திருக்கா அவகிட்ட கூட இப்படி பொய்யா நடிச்சிருக்கீங்க என அருணை வெளுத்து வாங்கி உள்ளார் மீனா. பின்னர் சீதாவும் மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

34
முத்துவை பழிவாங்க துடிக்கும் அருண்

இதையடுத்து சீதாவை வீட்டுக்கு அழைத்து செல்லும் அருண், அங்கு ரூமை பூட்டிவிட்டு, சீதாவின் காலிலேயே விழுந்து மன்னிப்பு கேட்கிறார். உன் மேல வேற யாராச்சும் அன்பாக இருந்தால் அது எனக்கு பிடிக்கவில்லை. முத்துவும், உங்க அக்கா மீனாவும் உன்மேல் ரொம்ப அன்பா இருக்காங்க. அது பிடிக்காம தான் இப்படி பொய் சொன்னேன். 

ஆனால் நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பு மட்டும் உண்மை என சொல்லி சீதாவை சமாதானப்படுத்துகிறார் அருண். சீதாவும், அருண் சொல்வது நேர்மையாக இருப்பதாக கூறி அவரை மன்னிக்கிறார். ஆனாலும் முத்து மீதுள்ள வன்மம் அருணுக்கு குறையவில்லை. டேய் முத்து இந்த தடவ நீ ஜெயிச்சிட்ட, உன்னை நிரந்தரமா சீதா குடும்பத்தில் இருந்து பிரிச்சி காட்டுறேன் என மனதில் குமுறுகிறார் அருண்.

44
ஸ்கூலை விட்டு வெளியேறிய கிரீஷ்

மறுபுறம் கிரீஷ், ஸ்கூலில் ரொம்ப மோசமாக நடந்துகொள்வதால் அவனை அழைத்து போலீசிடம் உன்னை ஒப்படைக்கப் போவதாக ஸ்கூலில் மிரட்டுகிறார்கள். அவர்கள் அவனை பயமுறுத்துவதற்காக அப்படி சொன்னாலும், அது உண்மை என நினைத்து கிரீஷ் ஸ்கூலை விட்டு ஓடிவிடுகிறான். ஸ்கூலை விட்டு எஸ்கேப் ஆகும் கிரீஷ் ஒரு காரின் டிக்கியில் சென்று ஒளிந்துகொள்கிறான். பின்னர் தான் அது முத்துவின் கார் என்று தெரிகிறது.

முத்துவும் கிரீஷ் உள்ளே இருப்பது தெரியாமல் டிக்கியை மூடிவிட்டு காரை எடுத்துச் செல்கிறான். செல்லும் வழியில் அருண் ஒவ்வொரு காராக சோதனை செய்கிறார். யாரையோ கொன்று கார் டிக்கியில் போட்டு எடுத்துச் செல்கிறார்கள் என்று தகவல் கிடைத்ததால் சோதனை செய்கிறோம் என போலீஸ் ஒருவர் கூறுகிறார். அப்படி இருக்கையில் முத்துவின் காரை திறந்து பார்த்ததும் அதில் கிரீஷ் இருப்பது தெரிந்தால் முத்துவை அருண் கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் இன்றைய எபிசோடு அனல் பறக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories