அப்படி உண்மையை தெரிந்து கொள்ளும் பட்சத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பமும், பரமேஸ்வரி குடும்பமும் ஒன்று சேரலாம். மேலும், சந்திரகலா வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம். அதன் பிறகு சிவனாண்டியுடன் இணைந்து நேரடியாக அக்காவை பழி வாங்கலாம். இல்லையென்றால் சிறைக்கு செல்லும் நிலை உருவாகும். அப்படியே இந்த சிரியலுக்கும் எண்டு கார்டு போடலாம். இல்லையென்றால் சில மாதங்களுக்கு பிறகு என்று குறிப்பிட்டு ரேவதி மற்றும் கார்த்திக்கிற்கு குழந்தை பிறந்தது போன்று காண்பித்து சீரியலை முடிக்கலாம். இதெல்லாம் இயக்குநர் கையில் தான் இருக்கிறது. அதுவரையில் கார்த்திகை தீபம் 2 சீரியலை பார்த்து மகிழலாம்.