கொஞ்சம் அங்க பாரு கண்ணா... முத்து கொடுத்த ட்விஸ்டால் ஆடிப்போன அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று..!

Published : Sep 02, 2025, 08:54 AM IST

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில், முத்துவால் சீதாவுக்கு உண்மை தெரியவருகிறது. இதனால் அருண் மாட்டிக் கொண்டாரா என்பதை பற்றி பார்க்கலாம்.

PREV
14
Siragadikka aasai serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் கடையில் வேலை பார்க்கும் ராணி, மனோஜை பிளாக்மெயில் செய்து அவரிடம் இருந்து பணத்தை அபேஸ் செய்தது மட்டுமின்றி, ஏசி, பிரிட்ஜ் என ஏராளமான பொருட்களையும் கேட்டு மிரட்ட, மனோஜ் அதெல்லாம் தர முடியாது என சொன்னாலும், நமக்கு எதுக்கு வம்பு என கூறி ரோகிணி அதை கொடுக்க சொல்லி இருக்கிறார். ஒரு ஆண் எவ்வளவு உண்மையை சொன்னாலும் இந்த உலகம் நம்பவே நம்பாது. அதுவே ஒரு பெண், இவன் என்னிடம் தவறாக நடந்துகொண்டான் என்று பொய் சொன்னால் கூட அதை உடனே நம்பிவிடுவார்கள் என ரோகிணி பேச்சைக்கேட்டு ராணி கேட்டதையெல்லாம் கொடுத்துவிடுகிறார் மனோஜ்.

24
மனோஜுக்கு ஐடியா கொடுக்கும் முத்து

இதையடுத்து வீட்டுக்கு வரும் மனோஜ், ரவியிடம் நடந்ததை கூறுகிறார். இதைக்கேட்டு கடுப்பான ரவி, இதுதான் நீ கடையை நடத்துற லட்சணமா, வந்து கேட்டா இப்படி தான் எல்லாத்தையும் அள்ளிக் கொடுத்துருவியா என திட்டுகிறார். ஊர்ல ஆம்பளைங்களுக்கு எங்க பாதுகாப்பு இருக்கு, ஒரு பொண்ணு பழிபோட்டா எல்லாரும் நம்பிவிடுகிறார்கள் என மனோஜ் சொன்னதும், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் மீனா, ஒரு பெண் பொய் சொன்னா அதை யாரும் நம்பிவிடமாட்டார்கள். 

அதற்கு ஆதாராம் இருக்கானு கேட்பார்கள். அவர்கள் பணம் கேட்கிறார்கள் என கொடுத்தால் நீங்க நிஜமாகவே தப்பு செய்தது போல் ஆகிவிடும் என சொல்கிறார் மீனா. பின்னர் மனோஜுக்கு ஐடியா கொடுக்கும் முத்து, அடுத்த முறை அவங்க பணம் வந்தால், அவங்களுக்கு தெரியாமல் ஒரு கேமராவை செட் பண்ணி, அவங்களிடம் பேசி உண்மையை வர வைத்துவிடு என ஐடியா கொடுக்கிறார்.

34
சீதாவிடம் முத்து வைத்த வேண்டுகோள்

மறுபுறம் முத்து தன்னுடைய கணவர் அருணை ஆள் வைத்து அடித்துவிட்டதாக சீதா அவர் மீது கோபத்தில் இருக்கிறார். அப்போது சீதாவை சந்திக்கும் முத்து, தான் அப்படி செய்யவில்லை என்பதை நிரூபிக்க தனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்றும், யார் மீது தப்பு இருக்கிறது என்பதையும் உனக்கு புரிய வைப்பதாகவும் கூறுகிறார். அதற்காக மீனாவிடம் பேசாமல் மட்டும் இருக்காத, எந்த பிரச்சனையாக இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் பிரிந்துவிடக் கூடாது என சீதாவிடம் கூறுகிறார் முத்து. பின்னர் அருணை சந்திக்கும் முத்து, என்மேல் இருக்கும் கோபத்தில் ஏன் பாசமாக இருக்கிற அக்கா, தங்கச்சியை பிரிக்குற என கேட்கிறார்.

44
வசமாக சிக்கிய அருண்

அதுதான் படிச்ச எனக்கும், படிக்காத உனக்கும் இருக்குற வித்தியாசம் என கூறுகிறார் அருண். உனக்கு மூளை வேலை செய்யாது, கை மட்டும் தான் பேசும், ஆனா எனக்கு போலீஸ் மூளை, எங்க எப்படி அடிச்சா யார் விழுவாங்கனு தெரியும், உன்னை அந்த குடும்பத்துல அப்படியே காவல் தெய்வம் மாதிரி பார்க்கிறார்கள். ஆனா நீ ஒரு குடிகாரன், ரெளடி. நீ வரவில்லை என்றாலும் எனக்கு என்னை காப்பற்றிக் கொள்ள தெரியும். என்னை அடிக்க வந்தவர்கள் உன்னுடைய ஆட்கள் இல்லை என்பது எனக்கு நல்லாவே தெரியும். 

ஆனா நீ தான் அனுப்புனனு ஏன் சொன்னேன் தெரியுமா, உன்மேல் சீதாவுக்கு வெறுப்பு வரணும். உன்மேல் சீதாவுக்கு வெறுப்பு வர வெச்சேன் பாத்தியா என அருண் பேசியதை, காரில் இருந்தபடி போன் வாயிலாக கேட்ட சீதா, திடீரென காரில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்து வெட வெடத்து போகிறார் அருண். இப்படி அவரை வசமாக சிக்க வைத்துவிட்டார் முத்து. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories