Published : Sep 06, 2022, 08:41 AM ISTUpdated : Sep 06, 2022, 11:50 AM IST
சமீபத்தில் தான் சின்மயி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். இதனால் மெல்ல மெல்ல திரையுலகில் இருந்து ஒதுங்கும் நோக்கத்தில் அவர் இது போன்ற முடிவுகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் நடித்திருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக் பாஸ்டர் படமாக அமைந்தது. இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.
25
samantha
தற்போது இவர் நடிப்பில் குஷி, யசோதா , சாகுந்தலம் ஆகிய படங்கள் திரைக்கு வர காத்திருக்கிறது. இதற்கிடையே தனது காதல் கணவர் நாகா சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் உருமாற்றம், மனமாற்றம் இரண்டையும் செய்து கொண்ட சமந்தா. முன்பே விட அதிக கவர்ச்சியுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதற்காக தனது உடலை கட்டுலாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள இவர் அவ்வப்போது ஜிம்மில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களிடம் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார். ஹாலிவுட்டில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் களமிறங்கிய இவருக்கு அங்கும் அதிக வரவேற்பு உண்டு. சமீபத்தில் புஷ்பா படத்தில் ஓ சொல்ரியா மாமா பாடலுக்கு சமந்தா போட்டிருந்த நடனம் இவரை பேன் இந்தியா நாயகியாக மாற்றியது.
இந்நிலையில் சமந்தாவிற்கு தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்த பிரபல பாடகி சின்மயி இனிமேல் பின்னணி குரல் கொடுக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக எனது பயணம் முடிவடையும் என நினைக்கிறேன். இனிமேல் எனது நெருங்கிய தோழி சமந்தாவிற்கு பின்னணி குரல் கொடுக்க இயலாது என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் தான் சின்மயி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். இதனால் மெல்ல மெல்ல திரையுலகில் இருந்து ஒதுங்கும் நோக்கத்தில் அவர் இது போன்ற முடிவுகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.