சமீபத்திய வெளியிடான கமலஹாசனின் விக்ரம் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படங்கள் இந்த ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய தமிழ் படங்களாக உருவாக்கியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று வெளியான திருச்சிற்றம்பலம் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த படம் செப்டம்பர் 5 வரை உலக அளவில் வசூல் செய்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தனுஷின் படம் 94.25 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாகவும்,தனுஷின் ஹிந்தி பிளாக் பாஸ்டர் ரஞ்சனாவுக்கு பிறகு உலக அளவில் அவர் செய்த மிகப்பெரிய வசூல் இதுதான் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு விரைவில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் படம் சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.