பாவனி - அமீருக்கு விரைவில் டும்.. டும்.. டும்..? கையில் கோப்பையை வாங்கிய பின் குட் நியூஸ் சொன்ன நடிகை..!

First Published | Sep 5, 2022, 10:54 PM IST

பிக்பாஸ் சீசன் 5, நிகழ்ச்சி மூலம் காதல்ரகளாக மாறிய பாவனி மற்றும் அமீர் இருவரும்... வழக்கமான பிக்பாஸ் காதல் கதை போல் இல்லாமல் தற்போது திருமணத்தில் முடியவுள்ளது. பாவனி நேரடியாகவே தற்போது அமீருக்கு காதலர் ப்ரபோஸ் செய்துள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாவனி. இவர் திருமணம் ஆன சில மாதத்திலேயே தன்னுடைய காதல் கணவரை இழந்தவர். இதன் பின்னர் மீண்டும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வந்த நிலையில், அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போது, வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அமீர் திடீர் என பாவனியிடம் காதலை கூறியது, செயற்கையாகவே பார்க்கப்பட்டது. மேலும் அமீர் பாவனியை விட வயதில் சிறியவர் என்பதால் அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டார் பாவனி.

மேலும் செய்திகள்: பளபளக்கும்... மினுமினுக்கும் 'சொப்பன சுந்தரி' ஆக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
 

Tap to resize

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் விஜய் டிவி இவர்களை பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சி மூலம் ஒன்று சேர்த்து. இவர்கள் இருவருமே காதல் உணர்வோடு நடனம் ஆடியதால் இவர்கள் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி வேற லெவலுக்கு ஒக்கவுட் ஆனது. 
 

இந்நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 பைனல் போட்டி நடந்த போது , இதில் அமீர் - பாவனி ஜோடி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. இதற்க்கு ஒரு புறம் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வர, பாவனி மற்றொரு குட் நியூஸ் ஒன்றையும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: முட்டாள்களே... இதை கேள்விப்பட்டதே இல்லையா? சொந்த வீடு என விமர்சித்தவர்களை வெளுத்து வாங்கிய நடிகை குஷ்பு!
 

அதாவது ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திருமணத்திற்கும் தயாராகி உள்ளனர். இதனை பாவனி கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், உங்களுடன் நடனம் ஆடுவது மிகப்பெரிய சவால் என்றாலும் நீங்கள் நல்ல மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். சரிவர நடனம் ஆடத்தெரியாத என்னை டைட்டில் வின்னர் பெரும் அளவுக்கு ஆட வைத்திருக்கிறீர்கள். இது ஒரு சிறப்பான பயணம், இந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நான் நன்கு அனுபவித்தேன். உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நீங்கள் மிகச்சிறந்த மனிதர், மாஸ்டர் மற்றும் மிகவும் உறுதியானவர், நல்ல நண்பர்.

மேலும் செய்திகள்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு குடும்பத்துடன் திடீர் விசிட் அடித்த சாய் பல்லவி! ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு!
 

எனவே நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து நாம் தொடங்கலாம். என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் மிகச் சிறந்த ஜோடியாக இருப்பீர்களா? அந்த நாளுக்காக நான் காத்திருக்கின்றேன். நீங்கள் எனக்காக எப்போதும் இருப்பீர்களா? ஐ லவ் யூ’ என்று பாவனி ரெட்டி பதிவு செய்துள்ளார். பாவனி தன்னுடைய காதலை  ஓபன் ஆகவே புரபோஸ் செய்து விட்ட நிலையில் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

Latest Videos

click me!