வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்பு நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இதானி நடித்திருக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்துக்கான புரமோஷன் பணிகளையும் மிகப்பெரிய அளவில் செய்து வருகின்றனர். இப்படத்துக்கான முன்பதிவும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் 2 மணிநேரம் 53 நிமிடம் ரன்னிங் டைம் கொண்டுள்ளது. கடந்த மாதம் முதல் தமிழில் ரிலீசாகும் படங்களுக்கு அதிகாலை 4 மணிகாட்சி திரையிடப்படுவதில்லை. அதே நிலை தான் தற்போது வெந்து தணிந்தது காடு படத்துக்கும் வந்துள்ளது. இப்படத்தின் FDFS 5 மணிக்கு தான் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... தளபதி 67 வேற லெவல் அப்டேட்... பாலிவுட் நடிகரை வில்லனாக்கும் லோகேஷ்..! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?