தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், எவ்வளவு பெரிய இடத்தை பிடித்திருந்தாலும், எப்போதுமே எளிமையுடன் இருக்கும் நடிகையாக இருப்பவர்.
இவரது அறிமுகம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றாலும், தன்னுடைய விடா முயற்சி மற்றும் திறமையான நடிப்பால் இன்று, பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
சில நாயகிகள் ஏற்று நடிக்க தயங்கும், அம்மா கதாபாத்திரத்தில் கூட அசால்டாக நடித்து, வெற்றி வாகை சூடியவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
எப்படி பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக தன்னையே வருத்தி கொண்டு நடித்து, கெத்து காட்டி வருபவர். அந்த வகையில், பல்வேறு கடின பயிற்சி செய்து இவர் நடித்த ஸ்போர்ஸ்ட் திரைப்படமான 'கனா' இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மேலும் தொடர்ந்து இவருக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது. அந்த வகையில் இவர் நடித்த சில படங்கள் தோல்விகளை சந்தித்தாலும், இவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது.
அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் சொப்பன சுந்தரி என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இது ஒரு புறம் இருக்க, தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பட்டு புடவையில்... பரவசப்படுத்தும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.