varisu
தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும், 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் நடித்து முடித்த கையோடு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 67 ஆவது படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த படத்தில் நடிகை திரிஷா அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகியோரை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், தளபதி 67 படத்தில், விஜய்க்கு மிக முக்கிய வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக திரையுலக வட்டாரத்தில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க சஞ்சய் தத்துக்கு சுமார் 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.