லோ நெக் உடையில் செம்ம ஹாட்..! இளம் நெஞ்சங்களில் கவர்ச்சி தீயை பற்றவைத்து பிக்பாஸ் ரைசா..! லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published Sep 12, 2022, 10:19 PM IST

பிக்பாஸ் ரைசா, தற்போது  லோ நெக் உடையல் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

பல முன்னணி நிறுவனங்களுக்கு மாடலாக இருந்து வரும் ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து தற்போது முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடிக்க போட்டி போட்டு வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் கஜோலுக்கு அசிஸ்டன்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த வேகத்தில் கதாநாயகி வாய்ப்பை கைப்பற்றி நடிக்க துவங்கினார்.

மேலும் செய்திகள்: தளபதி 67 வேற லெவல் அப்டேட்... பாலிவுட் நடிகரை வில்லனாக்கும் லோகேஷ்..! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?
 

அந்த வகையில் இவர் நடித்து வெளியான, 'பியர் பிரேமா காதல்' திரைப்படம் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரைசாவுக்கு ஜோடியாக ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்தை தயாரித்திருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது, சுமார் 6 படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான FIR திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிபிடத்தக்கது.

மேலும் செய்திகள்: என்னை மிரட்டி தான் விஜய் படத்துக்கு நடிக்க ஒத்துக்க வச்சாங்க..! ராதாரவி பேச்சால் பரபரப்பு..!
 

திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள ரைசா தற்போது, லோ நெக் உடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்கள் மனத்தில் கவர்ச்சி தீயை பற்ற வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

click me!