கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, எடுக்கப்பட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், இந்தப்படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
தமிழர்களின் மிகப்பெரிய எதிர்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, பொன்னியின் செல்வன் ட்ரைலர் அமைந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எகிறி உள்ளது. எனவே ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க ஆவலோடு கார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் பெண்களை கவரும் விதமாக தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ள சேலைகளில், த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யா ராய் (நந்தினி) உருவம் பொறிக்கப்பட்ட பார்டர்... முந்தியில், இப்படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், பிரபு, போன்ற அனைத்து நடிகர்களின் உருவமும் இடம்பெற்றுள்ள போஸ்டர் தரிக்கப்பட்டுள்ளது. புடவை முழுவதும் போர் வாள் உள்ளது. இந்த புடவை தற்போது விற்பனைக்கு வந்த தகவல் அறிந்து, புடவையை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: என்னை மிரட்டி தான் விஜய் படத்துக்கு நடிக்க ஒத்துக்க வச்சாங்க..! ராதாரவி பேச்சால் பரபரப்பு..!