மாடலிங் துறையில் வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கும் டயானா எரப்பா , நடிகையாகவும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ள இளம் நடிகையாவார்.
இவர் தொடர்ந்து மாடலிங் செய்வதற்கு, இவரது குடும்பத்தினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தனர். மாடலிங்கை விரும்பி இவர் செய்து வந்தாலும், எரப்பா எப்போதுமே ராணுவத்தில், இந்திய பாதுகாப்புப் படையில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்ந்தவர்.
ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்கிற முடிவில் இருந்த டயானா எரப்பா, அந்த கனவை ஒதுக்கி வைத்து விட்டது 2012 ஆம் ஆண்டு தி எலைட் மாடல் லுக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய போட்டிகளில் பங்கேற்றார். அதன் பின்னர் தொடர்ந்து சர்வதேச லெவல் மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.