பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் குந்தவையாக நடித்துள்ள நடிகை திரிஷாவும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.
25
பிங்க் நிற புடவையில் பேரழகியாக இந்த விழாவிற்கு வந்த நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்கள் எங்கும் ஆக்கிரமித்து உள்ளன.
35
அப்போது பேசிய நடிகை திரிஷா, குந்தவை கதாபாத்திரத்திற்காக நிறைய ஒர்க் பண்ணியதாகவும், செந்தமிழ் பேச மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நிறைய ரிகர்சல் மற்றும் பயிற்சி எடுத்ததால் நடிப்பதற்கு சுலபமாக இருந்தது. இளவரசியாக நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. அதனை நிறைவேற்றிய மணி சாருக்கு நன்றி.
55
ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, எனக்கும் அவருக்கும் இடையே படத்தில் நடக்கும் மோதல் ஹைய்லைட்டாக இருக்கும். நாங்க என்ஜாய் பண்ணி நடித்தோம் என திரிஷா கூறினார்.