ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த், இதையடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான இவர், அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை சமந்தாவை காதலித்து வந்தார் சித்தார்த். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.
இதையடுத்து நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து அவரை திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணம் நான்கே ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது. இதனிடையே சமீபத்தில் நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் காதலிப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இருவருமே விளக்கம் அளிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.
இதையும் படியுங்கள்... இசை வெளியீட்டு விழா தொடங்கும் முன்பே... பொன்னியின் செல்வன் பட பாடல்கள் ரிலீஸானது