இசை வெளியீட்டு விழா தொடங்கும் முன்பே... பொன்னியின் செல்வன் பட பாடல்கள் ரிலீஸானது

First Published | Sep 6, 2022, 5:41 PM IST

Ponniyin selvan Audio Launch : பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா தொடங்கும் முன்பே, இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஸ்பாட்டிஃபை மற்றும் அமேசான் மியூசிக் ஆகிய தளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.

மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி என்றாலே அது சூப்பர் ஹிட் கூட்டணி என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் காம்போவில் இதுவரை வெளியான ரோஜா, அலைபாயுதே, கடல், உயிரே, குரு, ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, இராவணன் என அனைத்து படங்களிலும் பாடல்கள் பிளாக்பஸ்டட் ஹிட் ஆகின. அந்த கூட்டணியில் தற்போது உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திலிருந்து இதுவரை சோழா சோழா மற்றும் பொன்னி நதி ஆகிய இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த இரண்டு பாடல்களுமே அமோக வரவேற்பை பெற்று வருகின்றன.

இன்று மாலை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழா தொடங்கும் முன்பே, இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஸ்பாட்டிஃபை மற்றும் அமேசான் மியூசிக் ஆகிய தளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது 4 பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. 

இதையும் படியுங்கள்... நச்சுனு லிப்லாக் கிஸ் அடித்து... புதுக் காதலனுடன் டேட்டிங்கை தொடங்கிய எமி ஜாக்சன் - வைரலாகும் போட்டோஸ்

ராட்சஸ மாமனே எனும் பாடலை ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் மகேஷ் விநாயகம் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். இப்பாடல் வரிகளை கபிலன் எழுதி உள்ளார். 

Tap to resize

அதேபோல் தேவராளன் ஆட்டம் என்கிற பாடலை யோகி சேகர் பாடி உள்ளார். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆவார். இப்பாடல் வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதி உள்ளார்.

அலைகடல் என்கிற பாடலை அண்டாரா நண்டி என்பவர் பாடி உள்ளார். அசாமை சேர்ந்தவரான இவர் சரி கம ப என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் ஆவார். இப்பாடலை சிவ ஆனந்த் எழுதி உள்ளார்.

சொல் என்கிற பாடலை ரக்‌ஷிதா சுரேஷ் பாடி உள்ளார். இவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான். இப்பாடல் வரிகளை கிருத்திகா நெல்சன் எழுதி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ஒவ்வொரு மைனஸையும் பிளஸ் ஆக மாற்றுவார்... அதுதான் என் அண்ணன் - சூர்யாவைப் பற்றி கார்த்தி போட்ட எமோஷனல் டுவிட்

Latest Videos

click me!