நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, கடந்த 1997-ம் ஆண்டு இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். இப்படம் ஹிட் ஆனாலும், இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இவரெல்லாம் எதுக்கு நடிக்க வருகிறார் என்றெல்லாம் விமர்சித்தனர்.
விமர்சனங்களை கண்டு துவண்டுவிடாமல், தனது கடின உழைப்பால் அடுத்தடுத்த படங்களில் நடிகராக மெருகேறிய சூர்யா, இன்று நடிப்பின் நாயகன் என பட்டம் பெறும் அளவுக்கு உச்ச நடிகராக உயர்ந்துவிட்டார். சமீபத்தில் இவரின் சிறந்த நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. சூரரைப் போற்று படத்துக்காக அவருக்கு இவ்விருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் சூர்யா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. அவர் முதன்முதலில் நடித்த நேருக்கு நேர் திரைப்படம் இன்று தான் ரிலீசானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் #25YearsOfCultSuriyaism என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தியும் அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தன் அண்ணனை பற்றி எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.