திருப்பத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, சமீபத்தில் ஹனிமூனுக்காக மஹாபலிபுரம் சென்றிருந்தனர். இது குறித்த புகைப்படத்தையும் மஹாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஏகப்பட்ட ட்ரோல் வந்தாலும் இருவரும் அதனை சற்றும் கண்டுகொள்ளாமல், தங்களுடைய வாழ்க்கையை துவங்கியுள்ள நிலையில், இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.