தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கி, தற்போதைய இயக்குனர்களுக்கு முன்னோடியாக இருப்பவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான, 'திருச்சிற்றம்பலம்' படத்திலும், நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை படக்குழு ஒருபுறம் கொண்டாடி வந்தாலும், இயக்குனர் பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, 'திருச்சிற்றம்பலம்' பட குழுவினரை மட்டுமல்லாமல், அவரது ரசிகர்களையும் கடந்த சில நாட்களாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் இவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து பாரதிராஜா தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், "தன்னுடைய உடல் நிலை நலம் பெற்று வருவதாகவும், மருத்துவமனையில் தன்னை பார்க்க அனுமதி இல்லை என்பதால், தன்னை காண யாரும் வர வேண்டாம். பூரண நலம் பெற்று அனைவரையும் சந்திக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகவுள்ள நிலையில், பாரதிராஜா பொது வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மேலும் இவரை சந்திக்க நெருக்கமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா இருப்பதால் அவரது மருத்துவ செலவுகளுக்கும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் பாரதிராஜாவின் மருத்துவ செலவிற்கு பணம் கொடுக்க அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் முன் வராமல் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகள்: ரஜினியை வைத்து திட்டம் போடும் அரசியல் கட்சிகள் ..! ரசிகர்களுக்காக தலைவர் எடுத்த அதிரடி முடிவு..!
எனவே இவரது மருத்துவ செலவுகள் அனைத்தையும் இயக்குனர் பாரதிராஜாவுக்கு மிகவும் நெருக்கமான அரசியல் கட்சி தலைவர் ஆன, புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் ஏற்றுக் கொண்டுள்ளாராம். மேலும் விரைவில் பூரண நலம் பெற்று பாரதிராஜா வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
பாரதிராஜா பல வெற்றி படங்களை படங்களை இயக்கி உள்ளது மட்டுமின்றி, சமீப காலமாக திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் இவரது மருத்துவ செலவிற்கு கூட பணம் கொடுக்க முன்வரவில்லை என கூறப்படுவது தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து எவ்வித ஆதாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: பளபளக்கும்... மினுமினுக்கும் 'சொப்பன சுந்தரி' ஆக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!