வாழ்த்துக்காக காத்திருந்த ரவீந்தருக்கு பல்பு கொடுத்த வனிதா... கெட்ட வார்த்தையோடு போட்ட டுவிட் வைரல்

Published : Sep 06, 2022, 02:43 PM IST

Vanitha vijayakumar : தயாரிப்பாளர் ரவீந்தருக்கும், சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே நடந்த 2-வது திருமணத்தை விமர்சித்து நடிகை வனிதா போட்டுள்ள டுவிட் வைரலாகி வருகிறது.

PREV
15
வாழ்த்துக்காக காத்திருந்த ரவீந்தருக்கு பல்பு கொடுத்த வனிதா... கெட்ட வார்த்தையோடு போட்ட டுவிட் வைரல்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா புரடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இவர். அதன்மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் மிகவும் குண்டான தோற்றத்துடன் இருப்பதால் இவரை ரசிகர்கள் செல்லமாக Fatman என்று அழைப்பார்கள். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராகவும் இருந்து வருகிறார்.

25

இவர் நடிகை வனிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டபோது, பீட்டர் பாலின் மனைவி தன்னை விவாகரத்து செய்யாமலேயே அவர் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக புகார் தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் வனிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் செய்வது தவறு என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார் ரவீந்தர். இதனால் வனிதாவுக்கும் ரவீந்தருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

35

இதனிடையே ரவீந்தர் நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு வனிதா என்ன சொல்லப்போகிறார் என்கிற ஆவல் அனைவருக்குமே இருந்தது. ஏன்.. ரவீந்தர் கூட வனிதாவின் வாழ்த்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக பேட்டிகளில் கூறி வந்தார். வனிதாவிடம் இருந்து வாழ்த்து கிடைக்கும் என காத்திருந்த ரவீந்தருக்கு தற்போது பல்பு தான் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... தீண்டாமையை நிராகரிக்காதது கல்வியா? புதிய விளக்கம் தந்த நீயா? நானா? கோபிநாத்

45

ரவீந்தரின் 2-வது திருமணத்தை மறைமுகமாக சாடி டுவிட் செய்துள்ளார் வனிதா. அதில், அடுத்தவர்களின் வாழ்க்கை பற்றி கவனிக்க நேரமில்லாத அளவுக்கு மகிழ்ச்சியாகவும், பிசியாகவும் இருக்கிறேன். கர்மா ஒரு B***H. அவளுக்கு எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்பது தெரியும், நான் அவளை முழுமையாக நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். 

55

இந்த டுவிட்டில் ரவீந்தரின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தாலும், அவரைப்பற்றி தான் வனிதா பேசியுள்ளார் என்பது ஊருக்கே தெரியும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரவீந்தர் - மகாலட்சுமி திருமணத்தை விமர்சித்து வனிதா போட்டுள்ள இந்த டுவிட் செம்ம வைரல் ஆகி வருகிறது. இதற்கு ரவீந்தர் பதிலடி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... தனுஷ்..நித்யாமேனனாக மாறிய ஜப்பான் ஜோடி... வைரலாகும் மேகம் கருக்காத பாடல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories