தென்னிந்திய நாயகிகளில் முன்னணி வரிசையில் இடம் பிடித்து விட்டார் ராஷ்மிகா மந்தனா. முன்னதாக இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்தது.
25
Rashmika Mandanna
சமீபத்தில் வெளியான புஷ்பா படம் இவரை பேன் இந்தியா நாயகியாக மாற்றிவிட்டது. புஷ்பா படத்தில் கிராமத்து பெண்ணாக வந்து துருதுருவென இவர் பேசியிருந்ததும் இவரது நடிப்பும் சினிமா பிரியர்களை வெகுவாகவே கவர்ந்தது.
இதை தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பன்மொழிகளும் இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் தற்போது விஜயுடன் வாரிசு படம் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ராஷ்மிகா.
தற்போது அமிதாப்பச்சலுடன் இவர் நடித்த குட்பை, சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்கள் திரைக்கு தயாராகி வருகிறது. அதோடு ரன்வீர் சிங்குடன் ஒரு படமும், டைகர்ஸ் ஷெராஃப்புடன் புதிய திட்டத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் ராஷ்மிகா.
சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபல நாயகிகளில் ஒருவராக மாறிவிட்ட ராஷ்மிகா மந்தனாவின் ஒவ்வொரு புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் இவர் கொடுத்துள்ள அசத்தலான புகைப்படங்கள் சோசியல் மீடியாவை நிரப்பி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.