லண்டனைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன், கடந்த 2010-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து விக்ரம் நடிப்பில் வெளியான தாண்டவம் படத்தில் நடித்த எமி ஜாகசனுக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.