'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு வெளியீட்டு விழாவிற்காக பிரதேயக செட்அப்..! பிரமிக்க வைக்கும் போட்டோஸ்!

First Published | Sep 6, 2022, 7:12 PM IST

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான, 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி பார்பவர்களையே பிரமிக்க வைத்துள்ளது.
 

பொன்னியின் செல்வன் படத்தை சுமார் மூன்று வருட கடின உழைப்பிற்கு பின்னர், இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம், பல வரலாற்று சுவடுகள், வீரம் நிறைந்த தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் ஆகியோரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்கமாக ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

ஐந்து மொழிகளில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில்,  விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ் ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Tap to resize

இந்த படத்தின் டீசர், பொன்னி நதி பாடல், மற்றும் சோழ சோழ ஆகிய படங்கள் வெளியான போதே... அதற்க்கு பிரத்தேயேக விழா ஒன்றை நடத்தி, வெளியிட்ட படக்குழு... இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவை யாரும் எதிர்பாராத அளவிற்கு, பிரத்தேயேக அரண்மனை செட்டப்புடன், வண்ண வண்ண லைட்டுகள் மின்ன பார்பவர்களையே பிரமிக்க வைத்துள்ளனர்.

தற்போது 'பொன்னியின் செல்வன் 1' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் இசை வெளியீட்டு விழா... சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இசை வெளியீட்டு விழாவிற்காக மும்பையில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராய்யும் வருகை தந்துள்ளார். இதுகுறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒருபுறம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

இந்த இசை வெளியீட்டு விழாவிற்காக போடப்பட்டுள்ள செட்அப் தான் குறித்த புகைப்படங்களும் மற்றொருபுறம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

Latest Videos

click me!