நடிகை ஸ்ரேயா நேற்று தன்னுடைய 40-வது பிறந்தநாளை தன்னுடைய காதல் கணவர், மற்றும் குழந்தையோடு கடற்கரையில், கவர்ச்சிகரமாக கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களை, ஸ்ரேயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பின்னரும், தொடர்ந்து... நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர்.
மேலும் தற்போது தமிழில் சண்டைக்காரி, நரகாசுரன் படங்கள் உட்பட 6 படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அழுத்தமாக கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவரது பிறந்தநாள் ஸ்பெஷல் ஓவர் ஹாட் பிகினி போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.