மகாலட்சுமியுடன் தனி விமானத்தில் ஹனிமூன் சென்றாரா ரவீந்தர்?... போட்டோ போட்டு அவரே சொன்ன விளக்கம் இதோ

First Published | Sep 12, 2022, 12:01 PM IST

Ravindar chandrasekar : தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமியுடன் விமானத்தின் முன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

தொகுப்பாளினியாக தொடங்கி பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களது திடீர் திருமணம் பலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

குண்டாக இருக்கும் ரவீந்தரை அழகாக இருக்கும் மகாலட்சுமி எப்படி திருமணம் செய்துகொண்டார் என்பது தான் அனைவரும் எழுப்பிய கேள்வியாக இருந்தது. மறுபுறம் அவர் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டதாக விமர்சனங்களும் எழுந்தன. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இருவரும் ஜோடியாக பேட்டி அளித்து வருகின்றனர்.

Tap to resize

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தங்களது ஹனிமூன் பிளான் குறித்தும் இருவரும் பேசி இருந்தனர். அதன்படி அவர்கள் இருவரும் வருகிற நவம்பர் மாதம் ஐரோப்பா அல்லது லண்டனுக்கு ஹனிமூன் கொண்டாட செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது தனது மனைவியுடன் விமானத்தின் முன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... கைப்புள்ள முதல் நேசமணி வரை... சொன்ன உடனே குபீர் என சிரிப்பு வர வைக்கும் வடிவேலுவின் காமெடி கேரக்டர்கள் இதோ

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியுடன் தனி விமானத்தில் பெலைஸ் தீவுக்கு ஹனிமூன் சென்றார்... தயவு செஞ்சு அப்படி போட்றாதீங்க. திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் கிட்ட குலதெய்வம் கோவிலுக்கு போறேன். இந்த போட்டோவை ஸ்கிரிப்டா செஞ்சிடாதீங்க என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் கோவில் முன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, “எண்ணுடுய குலம் செழிக்க வந்தவள் நீ. இனி துவங்கலாம் குல தெய்வத்தின் அருளோடு. நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி. நம்மை வெறுக்கும் உலகத்துக்கு மிக்க நன்றி. ஒரு நாள் உங்களை நாங்கள் நேசிக்க வைப்போம். என்றும் உங்கள் ரவி & மிஸஸ் ரவி” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... மன அழுத்தத்தை போக்கும் மாமருந்து ‘வடிவேலு’... வைகைப்புயலின் பிறந்தநாளுக்கு கடல்போல் குவியும் வாழ்த்து

Latest Videos

click me!