இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஷக்தி செளந்தர் ராஜன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான நாணயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய அவர், அப்படத்தில் நாய்க்கும் மனிதனுக்கும் இடையேயான அன்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி வெற்றி கண்டார்.