சூர்யாவுடன் சேர்ந்து தரமான சம்பவம் செய்ய தயாரான சிறுத்தை சிவா.. சூர்யா 42 படத்தின் அடுக்கடுக்கான அப்டேட்ஸ் இதோ

Published : Aug 22, 2022, 10:23 AM IST

Suriya 42 : சூர்யா 42 படத்திற்கு பூஜை போடப்பட்டு, இன்று ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் குறித்த அடுக்கடுக்கான அப்டேட்டுகளும் வெளியாகி உள்ளன.   

PREV
14
சூர்யாவுடன் சேர்ந்து தரமான சம்பவம் செய்ய தயாரான சிறுத்தை சிவா.. சூர்யா 42 படத்தின் அடுக்கடுக்கான அப்டேட்ஸ் இதோ

சூரரைப் போற்று, ஜெய் பீம் என வரிசையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சூர்யா, அடுத்ததாக வணங்கான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பாலா இயக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா மீனவராக நடித்து வந்தார். முதற்கட்ட ஷூட்டிங் மட்டுமே முடிந்துள்ள நிலையில், இப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அடுத்த படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார் சூர்யா.

24

அதன்படி தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டது. யுவி கிரியேசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... தங்கை.. மருமகளுடன் சிம்பு.. வேற லெவல் கெட்டப்பில்.. வெளியான கிளிஃப்ஸ் இதோ!

34


நேற்று சூர்யா 42 படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில், இன்று ஷூட்டிங் தொடங்கப்பட்டு உள்ளது. இதையொட்டி இப்படம் குறித்த அடுக்கடுக்கான அப்டேட்டுகளும் வெளியாகி உள்ளன. அதன்படி சூர்யா 42 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, ஒரியா உள்பட 10 மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாம்.

44

இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற உள்ளது. அங்கு 10 நாட்களில் முதற்கட்ட ஷூட்டிங்கை முடித்த பின்னர் செப்டம்பர் மாதம் கோவா செல்ல உள்ள படக்குழு அங்கு ஒரே கட்டமாக 25 நாட்கள் தொடர்ந்து ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். அதுமட்டுமின்றி இப்படத்தின் மோஷன் போஸ்டரை அடுத்த வாரம் வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். அத்துடன் இப்படத்தின் டைட்டிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டு... ஸ்பெயினில் சோலோவாக போட்டோஷூட் நடத்திய நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories