அரசியலில் நுழைகிறாரா ஆர்.ஆர்.ஆர் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர்... அமித்ஷா உடனான திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

First Published | Aug 22, 2022, 8:20 AM IST

Junior NTR : பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென சந்திப்பு மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பேரனான இவர், சமீபத்தில் நடித்த ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு உலகமெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் கிடைத்தன. குறிப்பாக இப்படத்தில் கொமரம் பீமாக நடித்துள்ள ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோட் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜகோபால் ரெட்டி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது.

இதையும் படியுங்கள்... திருமணம் எப்போது...? வருங்கால மனைவியுடன் போட்டோ பதிவிட்டு குட் நியூஸ் சொன்ன ‘குக் வித் கோமாளி’ புகழ்

Tap to resize

இதற்கான பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜக சார்பில் பரப்புரை மேற்கொள்ள அமித்ஷா நேற்று அங்கு வந்திருந்தார். பரப்புரை முடித்த பின்னர் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் சந்திப்பு மேற்கொண்ட அமித்ஷா, அவரிடம் சுமார் 30 நிமிடங்கள் உரையாடிவிட்டு சென்றார்.

அவர்கள் இருவரும் இந்த சந்திப்பின் போது ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பேசியதாக தெலங்கானா மாநில பாஜக தலைவர் கூறினாலும், இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஜூனியர் என்.டி.ஆர் அரசியல் குடும்பத்து வாரிசு என்பதாலும், அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதாலும், அவரை பாஜக பக்கம் இழுக்கவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... வாவ்...வெளியாகிடுச்சு புஷ்பா 2 அப்டேட்..என்ன விஷயம் தெரியுமா?

Latest Videos

click me!