நடிகை நயன்தாரா, தனது காதல் கணவன் விக்னேஷ் சிவனுடன் தற்போது ஜாலியாக இரண்டாவது ஹனிமூனை கொண்டாடி வருகிறார். ஜோடியாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள இருவரும் அங்குள்ள பல்பேறு ஊர்களுக்கு சென்று சுற்றிப் பார்த்து வருகின்றனர்.
28
முதலில் ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற நகரமான பார்சிலோனே சென்ற விக்கி - நயன் ஜோடி அங்கு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இருவரும் ஜோடியாக இந்திய தேசியக் கொடியை பிடித்தபடி வலம் வந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
38
இதுதவிர அங்குள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்த்து புகைப்படம் வெளியிட்ட இந்த ஜோடி, நடு ரோட்டில் ரொமான்ஸ் செய்தபடி போட்டோஷூட் ஒன்றையுல் நடத்தி இருந்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி படு வைரல் ஆனது.
48
இதையடுத்து ஸ்பெயினில் உள்ள மற்றுமொரு புகழ்பெற்ற நகரமான வேலன்ஸியாவிற்கு சென்ற விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி அங்கு சில தினங்கள் தங்கியிருந்து ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர்.
நடிகை நயன்தாரா தனியாக போடோஷூட் நடத்துவது என்பது அரிதான விஷயம். இந்நிலையில், தற்போது வேலன்ஸியாவில் நடிகை நயன்தாரா சோலோவாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதன் போட்டோஸும் தற்போது வெளியாகி உள்ளன.
68
நயன்தாராவின் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “நீ என் உலக அழகியே... உன்னைப்போல் ஒருத்தி இல்லையே! என் உலக அழகியும், இவ்வுலகின் அழகும்” என ரொமாண்டிக் கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
78
அந்த போட்டோஷூட்டில் குட்டை டவுசரும், கருப்பு நிற டீ ஷர்ட்டும் அணிந்து வித விதமாக போஸ் கொடுத்துள்ளார் நயன்தாரா. வேலன்ஸியாவின் எழில் கொஞ்சும் அழகுடன் நயன்தாரா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.
88
நயன்தாரா நீண்ட நாட்களுக்கு பின் சோலோவாக நடத்தியுள்ள போடோஷுட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், அவரின் அழகை வர்ணித்து வருவதோடு, அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளையும் போட்டு வருகின்றனர்.