ஜெயிலர் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளார். அதேபோல் நடிகை ரம்யா கிருஷ்ணன், ராக்கி பட நடிகர் வஸந்த் ரவி, யோகிபாபு, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.